Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae

பல்லவி

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-
தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம்

சரணங்கள்

1.அன்னை மரி சுதனை – புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம்

2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம்

3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி – தோத்திரம்


Thothiram Seivenae – Ratchakanai
Thothiram Seivenae

Paaththiramakka Immaaththram Karunai Vaitha
Paarththipanai Yutha Koaththiranai Entrum

1.Annai Mari Suthanae Pul Meethu
Amilthu Kazhuthavanai
Munnanai Meethuttra Sinna Kumaaranai
Munnurai Noorpadi Innila Thuttronai

2.Kanthai Pothinthavanai Vaanorkalum
Vanthadi Panipavanai
Manthaiyar Kaanantha Maatchi Yaliththonai
Vaana Paran Ennum Gnana Kunavaanai

3.Sembon Nuruvaanai Deasikarkal
Theadum Kuruvaanai
Ambara Meaviya Umbar Kanaththodu
Anbu Peara Nintru Paim Pon Malar Thoovi

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks