தூதர் கூட்டம் பாட்டு பாடவே
இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே
ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரே
இது தாழ்மை என்று நாளும் எண்ணவே
1 பட்டுத் தளிரோ குளிர் கொட்டும் மழையோ
கட்டிக் கரும்போ இது மொட்டும் மலரோ
கண்ணே உன் கண் மூட பாட்டு
சொல்லித்தர நீர் என்று கேட்டு
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
2 அன்புச்சரமோ மரி அன்னை மடியோ
தவழும் நிலவோ நீர் பாடும் குயிலோ
அன்பே என் நெஞ்சில் ஓர் பாட்டு
அருள் கூறும் சங்கீதம் கேட்டு
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
3 இலையில் பனியோ உன் நிலைதான் இன்றோ
இருளில் ஒளியோ எம் மனதின் குறையோ
அன்னாளின் இதயத்தின் ராகம்
மன்னிக்கும் பண்பை நீர் தாரும்
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
Thoodhar Kootam Paatu Paadavae
Indha Ulagam Muzhudhum Magzhildhu Vaazhavae
Oru Mannavan Vandharae Siru Kudilai Kandaarae
Idhu Thaalmai endru Naalum Ennavae
1. Pattu Thaleero Kulir Kottum Mazhaiyoo
Katti Karumboo Idhu Mottum Malaroo
Kannae Un Kan Mooda Paattu
Solli thara Neer Endru Ketu
Thara Vendum Arulai Thara Vendum
2. Anbu Saramo Mari Annai Madiyoo
Thavazhum Nilavoo Neer Paadum Kuyiloo
Anbae En Nenjil Or Paatu
Arul Koorum Sangeedham Kettu
Thara Vendum Arulai Thara Vendum
3. Ilayil Paniyoo Un Nilai Thaan Indroo
Irulil Oliyoo Em Manadhin Kuraiyoo
Annalin Idhayaththin Raagam
Mannikkum Panbai Neer Thaarum
Thara Vendum Arulai Thara Vendum