Thayai Koor Iyya – தயை கூர் ஐயா

தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான்
தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா
தயை கூர் ஐயா

சரணங்கள்

1.ஜெய மனுவேலன் நய அனுகூலன்
சீரா தீரா அதிகாரா திருக்குமாரா
சேயர்கள் பணிவிடை மேவிய நேசவி
லாச க்ருபாசன யேசு நரேந்திரா!- தயை

2. வானத்திருந்து வந்து ஞானத் துரு உவந்து
வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு
மாடடை வீடதினூடு புல் மேடையில்
நீடின போதினி மோடியதாமோ?- தயை

3. தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி
தராதலமேவி வா பாவி எனக் கூவி
சாங்கமதாய் அருள் ஓங்கி மகா பெரு
ஈங்கிசையாய் உயிர் நீங்கினதாலே நீ- தயை

4. தேவ ரட்சிப்பனைத்தும் பாவிகட்காய் விளைத்தும்
சிலுவையில் மாண்டும் துயர் பூண்டும் சிறை மீண்டும்
ஜீவனோடாதி பராபரனார் வல
பாரிசமே அரசாளும் இந் நேரம் நீ- தயை

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version