சிந்தனைப்படாதே நெஞ்சமே
பல்லவி
சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த
தேவ சுதன் இருக்கிறார்.
அனுபல்லவி
அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. – சிந்
சரணங்கள்
1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன்
றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க,
புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,
சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. – சிந்
2. சோங்கில்அயர் சீடரின்முன் பாங்குடன் தயவளித்துத்
தூங்கினோர் உனையும் வந்து தாங்குவார், என வந்தாலும்;
ஓங்கும் இஸ்றாவேல் ராசன் தூங்கவும் இலையே; சும்மா
ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று – சிந்
3. எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம் ஜெயம்கொண்டு
அத்தனின் வலத்தில் நித்திய துத்தியத் திருந் தரசாள்
கர்த்தனாம் கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்
தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு. – சிந்