Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை

சிலுவை திரு சிலுவை
சிலுவையின் இனிய மறைவினில் மறைத்து
கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய

1. பரியாசம் பசி தாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
பாவமறியா பரிசுத்தர் இயேசு (2)
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்

2. கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள் முடி பின்னி தலையிலே சூட
நான்கு காயங்கள் போதாதென்று (2)
நடு விலாவையும் பிளந்திட செய்த

3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
இரத்தத்தால் பாவ கறைகள் நீக்க
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)
சாபத்தினின்று நீ விடுதலையடைய

4. லோக சிற்றின்ப பாதையை நோடி
மாளும் பாவியை சிலுவையில் தேடி
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து (2)
அன்பினை ஈக்க ஐங்காயமான

Siluvai Thiru Siluvai By Mrs.VioletAaron சிலுவை திரு சிலுவை Tamil Christian Songs

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version