Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை
சிலுவை குறித்த மேன்மை இது – இயேசு
சிந்தின தூய இரத்தம் இது
மாறுமோ அந்த பாசம் தான்
விலகுமோ அந்த நேசம்
மாறுமோ செய்த தியாகம் தான்
விலகுமோ அந்த ஏக்கம்
மாறினாலும் மாறாது விலகினாலும் விலகாது
படைப்பின் தேவன் இவர் தான் என்று
படைத்த படைப்புகள் சொல்லும்
பரத்திலிருந்து வந்தவர் என்று
பாச மொழி அதை காட்டும்
படைப்பின் கரத்தால் ஆணிகள் ஏற்றார்
எந்தன் கரத்தை மீட்க
சிலுவை மரத்தால் சாபத்தை சுமந்தார்
என் பாவ சிந்தையை போக்க
மாறினாலும் மாறாது விலகினாலும் விலகாது
பலிக்கு செல்லும் ஆட்டை போல
மறந்ததே நெஞ்சம்
பலியாவதை அறிந்தும் கூட
பேசவில்லை என் தெய்வம்
என்னை நினைத்து மௌனமாய் இருந்தார்
என்னை மீட்க தானே
என்னை நினைத்து தியாகமாய் இருந்தார்
என்னை காக்க தானே
மாறினாலும் மாறாது விலகினாலும் விலகாது
அப்பா உலகத்தை நேசித்ததாலே
இயேசுவை நமக்காய் தந்தார்
அவரின் மரணத்தை நம்புவதாலே
நித்திய ஜீவன் என்றார்
இயேசு தான் வழியும் சத்தியமானார்
நித்திய ஜீவனின் தேவன்
அல்பா ஒமேகா நானே என்றார்
என்றும் இருப்பவர் அவரே
மாறினாலும் மாறாது விலகினாலும் விலகாது