Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா

சரணம் சரணம் அனந்தா – Saranam Saranam Anantha

சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா

சரணங்கள்

1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே
சென்று பல பாடுபடவும் தயவானார் – சரணம்

2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்
தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் – சரணம்

3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி
பாதகனை யோ? இறையை யோ? விட என்றான் – சரணம்,

4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று
திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் – சரணம்

5.தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே
தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக் கொடுத்தான் – சரணம்

6.கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக‌
காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான் – சரணம்

Saranam Saranam Anantha Satchithanantha
Thaveethin Maintha Osanna Sarana Pathantha

1.Deva Suthan Ponthiyu Pilaththinidamae
Sentru Pala Paadupadavum Thayavaanaar

2.Thanthu Seithu Ponthiyu Pilaththu Thurai Thaan
Tharparanai Vittu Vida Thannul Enninaan

3.Parapaaso dathipathiyai Paniya Niruththi
Paathaganai Yo Iraiyai Yo Vida Entraan

4.Jeevanuda Athipathiyai Siluvaiyail Kontru
Thirudaiyae Vittuvida Theeyavar Keattaar

5.Thanneer Thanai Eduththu Kai Kaluviyae
Tharparanai Kolvathaekan Koppu Koduththaan

6.Kallanaiyae Vittu Vittu Yutharkatkaaga
Kaavalanai Kurusarai Paaviyum Theerththaan


பல்லவி

சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்

1.பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்‌

2.கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்
காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்‌

3.முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்‌

4.கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார். – சரணம்

5.துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,
துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார். – சரணம்‌

6.முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார். – சரணம்

Saranam Saranam Anantha Satchithanantha
Thaveethin Maintha Osanna Sarana Pathantha

1.Piththan Entru Vellai Arai Sattai Aninthu
Peathaga Yearothae Pari Kaasam Panninaan

2.Kaattrunil Searththiruka Katti Valuvaai
Kaavalan Than Searvai Ellaam Koodi Aliththaar

3.Mulllin Mudi Seithaluththi Vallaal Enavae
Moorkka Mudanae Thadikon darrkka Adiththaar

4.Kaiyinil Sengolathentru Moongil Ontrittu
Kaavalan Nee Yutharukentro Viyam Sonnaar

5.Thuppinaar Mugaththinil Athikkiramamaai
Thunniya Kaikolai Vaangi Seanniyil Pottaar

6.Mulankaalilae Irunthu Thendan Panniyae
Munnavanaithaan irainji Kannaththarainthaar

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks