பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
சரணங்கள்
1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம்
2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம்
3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம்
5. மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே — சமாதானம்
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே — சமாதானம்
Samaathaanam Othum Yesu kiristhu
Ivar Thaam Ivar Thaam Ivar Thaam
1. Nam Thaathi Pithaavin Thiruppaalar Ivar
Anukoolar Ivar Manuvaelar Ivar – Samaathaanam
2. Neya kirubayin oru seyar Ivar
Parama Rayar Ivar Nama Thaayar Ivar -Samaathaanam
3. Aadhi Narar Seitha Theetharavae
Arulanathamaai Adiyaar sonthamaai -Samaathaanam
4. Aaranam Paadi Vinnnnor Aadavae
Aringor Thaedavae Idaiyor Koodavae – Samaathaanam
5. Meyyaakavae Maesaiyaavumae
Nammai Naadinaarae Kirupai Koorinaarae – Samaathaanam
6. Arulaanantha Motcha Vali Kaattinaarae
Nilai Naattinaarae Mudi Soottinaarae – Samaathaanam