சமயமிது நல்ல சமயம் – Samayamithu Nalla Samayam
பலலவி
சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே சாமி
அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர ,
சரணங்கள்
1.யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும் விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ் சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சமய
2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை, – சமய
3.ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், – சமய
4.பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சமய
Samayamithu Nalla Samayam Umathaavi
Tharaveanumae Saami
Amaiyum Saththuvanguntri
Arul Gnana Thuyirintri
Amarnthu Searnthelumbaa Thurangidum
Adiyanmee Thanal Mootti Yuir Thara
1.Yeasu Kiristhuvin Mael Neasam Paththiyam Visu
Vaasam Nambikkai Samaathaanam Mangidalaatchche
Veesunkiranaththaavi Neasajuvaalai Mootti
Minjunseeva Narkanikaleengumai
Kenjuthaasanin Manathilongida
2.Jebamo Thavamo Devaathiyaanamo Vaanjaiyo
Seiyun Suyamuyarchi Thoiyum Kaaranamaeno
Thavanam Gnaanamuthin Mael Sattrumillaathatheano
Thanthaiyae Uyir Thanthenai Thaangida
Unthaiyaiyinur Saaganalaaviyai
3.Oothum Pirsangamum Oosai Kaithaalam Pola
Olikkuthallaamal Balan Palikkuthillai Thaakkul
Yeathumattridum Pallathelumbu Uyirthelumba
Esaekkiyealurai Vaakkiyaluyirul
Pokkiyae Seitha Aaviyae Enganam
4.Penthekosthinil Koodi Vantha Seedarayantru
Unthanaaviyinai Polinthapisheakam Seitha
Vinthaipolaemathidam Vanthem Vealaigal Muttrum
Veathanae Umatharuli Uyir Peara
Poothalar Umai Pottra Nin Seayaraai