Robert Roy-THIRANDHA VAASAL (The Medley) | Tamil Worship | Tamil Christian Song 2020

அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு
நடத்திடுவார்-2

காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா-2
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை-2

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு
நடத்திடுவார்-2

எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்-2
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்-2-மந்தையில்

அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு
நடத்திடுவார்-2

ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்-அழகாய்

தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்-அழகாய்

திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்?-2
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்-2

இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்-2
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார் ?-4

நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்-2

இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே-2
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே-2-திறவுண்ட

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version