1. இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு,
யுத்தவர்க்கங்களை அணிந்து கொண்டு;
பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து விட
இரட்சணிய கொடியை உயர்த்துவோம்!
பல்லவி
ஜெய வீரரே போர் புரிவோம்!
ஜெயங் காண போர் புரிவோம்!
விசுவாசத்தோடு போர் புரிவோம்
இரட்சணிய மூர்த்தி ஜெயந்தருவார்
2. லோக தேக சுகம் வெறுத்துவிட்டு,
இரட்சணியத் தலைச்சீரா அணிந்து
ஆவியின் பட்டயக் கருக்கால் வெல்வோம்!
தேவசகாயத்தால் முன் செல்வொம்! – ஜெய
3. இரட்சணிய வீரரே! நாம் ஒருமித்து
இரட்சணிய மூர்த்தி அன்பால் நிறைந்து
மோட்சம் சேருமட்டும் நிலைத்திருந்து
என்ன நேரிட்டாலும் போர் புரிவோம்! – ஜெய