1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தைக்காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
Raakaalam Bethlehem Meitpergal
Tham Manthai Kaathanar;
Karthavin Thuthan Iranga
Vin Jothi Kandanar.
2.அவர்கள் அச்சம் கொள்ளவும்
விண் தூதன் “திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற் செய்தி கூறுவேன்“
Avargal Atcham Kollavum
Vin Thuthan “Thihil Yean?
Ellarukkum Santhosamam
Nar Seithei Kooruven”
3. “தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்;
பூலோகத்தாருக்கு இரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்“
“Thaveethin Vamsam Oorilum
Mei Kristhu Naathanaar;
Poologatharukku Ratchakar
Intraikku Piranthar”
4. “இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்;
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்“
“Ithungal Adaiyalamam
Munnanai Meethu Neer;
Kanthai Pothintha Kolamai
Apbaalanai Kaanbeer”
5. என்றுரைத்தான்; அட்சணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
Endruraithan Atchanamaei
Vinnoraam Koottathar
Aththoodhanodu Thondriyae
Karthaavai Potrinaar
6. மா உன்னதத்தில் தேவனே,
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
எல்லோர்க்கும் ஈகுவீர்
Maa Unnadhathil Devanae
Neer Maenmai Adaiveer;
Boomiyil Samadhanamum
Ellorkkum Eeguveer.