Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும்

பல்லவி

பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை
என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.

சரணங்கள்

1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர்
தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன்

2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர்
நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன்

3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று
வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன்

4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு
தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. – பொன்

5. கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர்
நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். – பொன்

6. ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப்
பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார். – பொன்

7. கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும்
உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? – பொன்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks