பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam

பின்மாரியின் அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அதிகமாய் பொழிந்திடுமே
ஆவியில் நிரப்பிடுமே

அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே

எலும்புப் பள்ளத்தாக்கினில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே

கர்மேல் ஜெப வேளையில்
கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபும் நடுங்கிடவே
அக்னி மழையாகப் பொழிந்திடுமே

சீனாய் மலையின் மேலே
அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னை அக்கினியாய் மாற்றிடுமே

Pinmariyin Abishekam | Rajan Thomas| Anthyakala Abishekam Tamil

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version