பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா

1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

6. உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version