PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்
பரிசுத்த ஆவியே என்னில் வாரும்
பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும்
மகிமைமேல் மகிமை நான் அடைந்து
மறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன்
எழுந்து ஜொலிக்க வாரும்
என் வாஞ்சைகள் தீர்க்க வாரும்
1. மேல்வீட்டறை அனுபவத்தில்
நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும்
வெவ்வேறு பாஷைகள்
பேசிடனும் பக்தியுள்ளோனாக
உருமாறனும்
2. செடியான உம்முடனே
இணைந்து கனிகள் தந்திடனும்
அக்கினியாய் நான் மாறிடனும்
பாகாலின் ஆவியை துரத்திடனும்
3. பின்மாரி அபிஷேகத்தை
சபை மீது இன்றே ஊற்றிடுமே
ஆத்தும அறுவடை நடந்திடனும்
எழுப்புதல் எங்கும் பரவிடனும்.
https://www.youtube.com/watch?v=sAnWxKwTw4s