பரிசுத்தாவி நீர் வாரும் – Parisuthaavi Neer Vaarum
பல்லவி
பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று
அனுபல்லவி
அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி
சரணங்கள்
1. செயல்குண வசனத் தீதுகள் போக,
திருச்சபை யதிலிவர் பூரணராக,
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,
ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி
2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,
நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,
சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி
3. அஞ்ஞானங்க ளோடிவர் சமர்புரிய,
அருண்மறை யதினாழங் களையறிய,
நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய,
நின்னடியாரிவ ரென்பது தெரிய. – பரி
4. பக்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய,
பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய,
நித்தமுங் கிருபையின் கனி கொய்ய,
நிலைவரமாய் இவராவியில் துய்ய. – பரி
5. தினமறை யோதி ஜெபித்து மன்றாட,
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட,
உணர்வோடு தொழுது கீதங்கள் பாட,
உள்ளந் திருந்து ஜீவாறுகளோட. – பரி
Parisuthaavi Neer Vaarum – Thida
Paduththal Pearuvorkku Arul Thaarum Intru
Arulinai Pearukkum Akkini Mayamae
Aaviyin Narkani Nagumaa thuyamae
1.Seayal Guna Vasana Theethukal Poga
Thirusabai Yathilivar Pooranaraaga
Jeayamodu Peaiyai Ethirththu Kondeaga
Jebathaba Thiyaanam Seivatharkkaaga
2.Narkarunai Thanai Nalamudan Vaanga
Naaloru Meaniyaai Avaiyilonga
SarGunaraai Evar Sabaiyai Kai Thaanga
Sagala Theethaana Peathangalum Neenga
3.AnGnaanga lodivar Samarpuriya
Aranmarai Yathinaalang Kalaiyariya
Nenjinil Anbu Kolunthu Vitteariya
Ninnadiyaariva Renbathu Theariya
4.Bakthiyum Thaazhmaiyum Uyir Uiyya
Parisuththamaana Jeeviyam Seiya
Niththamum Kirubaiyin Kani Koiya
Nilaivaramaai Evaraaviyil Thuiyya
5.Thinamarai Yothi Jebiththu Mantraada
Thirusabai Yathin Aikkiyaththinir Kooda
Unarvodu Thozhuthu Geethangal Paada
Ullam Thirunthu Jeevaarukaloda