பரனே பரம் பரனே – Paranae param paranae

1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ,
உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்!
பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்;
சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே!

2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக்
காலத்தையுங் கழித்தேன் உயர் கதிகூட்டும் ரக்ஷணிய
மூலத்தனி முதலே, கடை மூச்சோயுமுன் முடுகிச்
சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே!

3. கோதார்குணக் கேடன், மிகக் கொடியன், கொடும்பாவி,
ஏதாகிலு நன்றொன்றில னெனினும் புறக்கணியா-து
ஆதாரசர் வேசாவன வரதாவரு ணாதா,
பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப் பரிவாய்க்கடைக் கணியே!

4. பேராதர முடையாய்ப்பெரி யோனே, பெரு மானே,
பாராதரித் துயிரீந்திர க்ஷணையீட்டிய பரனே!
ஓராதர முனையன்றிலை, உயிர்போம்பொழு துடன்வந்-து
ஆதாரம் புரிவார் எனக் கையா? கடைக் கணியே!

5. அன்பார்கலி அருண்மாமழை அடியார்க்க னவரதம்
இன்பார்தரு கிருபாநிதி, இரக்ஷண்ய புண்ணியக்குன்
துன்பாற்சர ணடைந்தேன் எனை யொறுக்காய் அகத்தொளிதந்-து
என்பாற்பிழை பொறுத்தாதரித் தெந்தாய், கடைக் கணியே!

6. கிருபாகர கருணாகர கிளர்புண்ணியப் பொருப்பே,
பெருமாவடி யேன்செய்பிழை பொறுத் தென்னுயிர் பிரிகால்
மருவார்தரு குருசில் திகழ் வதனாம் புஜமும்முன்
திருநாமமந் திரமும்மகந் திகழக் கடைக் கணியே!

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks