பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
உயிராய் வந்தீரைய்யா
நார்வே நீர்தானைய்யா – என்
ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக
1.அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே-ஆவியானவரே
2.மேன்மையாய் உயர்த்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
3.மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
உருமாற்றம் அடைகின்றேன்
உம் மேக நிழல்தனில்
4.விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
5.தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகிறார்
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகிறீர்
6.அக்கினி ஸ்தம்பம்
மேக நிழலாக
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறார்
7.அப்பா பிதாவே என்று
கூப்பிட செய்தீரே
பிள்ளையான் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்து உன் வரவால்