நடு இரவினில் கடும் குளிரினில்
என் பாலன் பிறந்தார் புவியினில்-2
எங்கும் இருள் சூழ்ந்ததே
எல்லா வாசல்கள் அடைந்திட்டதே
பெத்லகேம் வீதியிலே
தங்க இடம் தேடி அலைந்தனரே
சத்திரத்தில் இடமில்லை
ஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர்
இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2
உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்
உலகில் வந்துதித்தார்
தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்
அவர் அன்பிற்கு அளவே இல்லை
தேவனின் சித்தத்தை செய்ய வந்தார்
அவர் அன்பிற்கு இணையே இல்லை
மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்
உலகத்தை இரட்சிக்கவே
கல்வாரி சிலுவையை தெரிந்து கொண்டார்
மனிதனை மீட்டிடவே
இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2
உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்
தூதர்கள் பாடினர்
மேய்ப்பர்கள் மகிழ்ந்தனர்
சாஸ்திரிகள் வியந்தனர்
இராஜாக்கள் நடுங்கினர்
இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
நம் பாவம் போக்க
சிலுவையில் மரித்தார்
மரணத்தை ஜெயித்தார்
மூன்றாம் நாள் எழுந்தார்
பரலோகம் சென்றார்
மீண்டும் வருவார்-2
உலகத்தின் இரட்சகர்
உன்னையும் என்னையும்
இயேசு இராஜன் இன்று பிறந்தார்
சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2
உலகத்தின் இரட்சகர்
நமக்காக வந்தார்
நம்மை மீட்க வந்தார்
உன்னையும் என்னையும்
அவரோடு சேர்த்துக்கொள்ள
உலகில் வந்துதித்தார்