கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen

கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்

1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்

2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்

3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்

4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது

5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்

6.வீடு கட்டுவோர் புறக்கணித்தது
மூலைக் கல்லாயிற்று
கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்
ஆச்சரியம் இது

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version