கர்த்தர் மேல் பாரத்தை – Karthar Mel Barathai

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்

5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version