கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மாற்றினது எந்தன் வாழ்வினையே
உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்