Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும்

பல்லவி

கல்வாரி மலையோரம் வாரும்,
பாவம் தீரும்.

அனுபல்லவி

செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே

சரணங்கள்

1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு,
நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,
தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு,
சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு,
சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா- ஜோதி – கல்

2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ?
உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ?
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ?
மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே – ஜோதி – கல்

3. மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்குவதுமேனோ?
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ?
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ?
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டது மேனோ?
சண்டாளர்கள் நம்மால்தானே, நம்மால்தானே – ஜோதி – கல்

4. ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை,
நாமக்கிறிஸ்தவர்க்கு இருபங்கு தொல்லை,
பட்ச பாதம் ஒன்றும் பரதீசில் இல்லை,
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை,
பந்தயத்திலே முந்தப் பாரும், முந்தப் பாரும் – ஜோதி – கல்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version