காலமோ கொஞ்சம் தான் மீதி
தேவையோ ஏராளம் உண்டே
பின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்
முன்னோக்கியே சென்றிட வேண்டும்
இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே
1. சுவிசேஷ ஊழியம் செய்ய
தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே
உலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்
உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்
இயேசு சமாதானம் அருளுவதாலே
2. முன்னோடியாய் செல்லும் இயேசு
பின்னேகியே நாமும் செல்வோம்
நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்
முழு மனதுடன் முன்னேறி செல்வோம்
விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே
3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்
அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்
பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று
முழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்
வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே