Kadal Aalayai pola – கடல் அலையைப்போல
Avarthaan Yesu
கடல் அலையைப்போல துன்பம் தொடர்ந்து வருகையில்
காற்றைப்போல கஷ்டம் என்றும் இருக்கையில்
காற்றையும் கடலையும் அதட்டிய ஒருவர் உண்டு
கவலையும் கண்ணீரையும் ஆற்றிட ஒருவர் உண்டு
அவர்தான் இயேசு (3)
உன்னை படைத்தவர் அவரே
அவர்தான் இயேசு (3)
உன் நண்பனும் அவரே
எப்போது முடியும் என்று ஏங்கினாயோ ?
மாற்றம் வெறும் வார்த்தை என்றே நினைக்கின்றாயோ ? (2)
நல்வாழ்வு எனக்கில்லை என்று எண்ணம் கொண்டாயோ ?
சாகும்வரை இதுதான் நிலைமை என்றே நினைத்தாயோ ?
உனக்கு ஒருவர் உண்டு
உன் அருகில் இன்று நிற்கும்
இயேசு
அவர்தான் இயேசு (2)
அவர் அற்புதம் செய்பவரே
அவர்தான் இயேசு (3)
உன் இரட்சகர் அவரே
உற்றாரும் உறவினரும் உன்னை ஒதுக்கினாலும்
நீ நம்பிய நண்பர் உன்னை மறந்திட்டாலும் (2)
உன் தாரமும் பிள்ளைகளும் உன்னை வெறுத்திட்டாலும்
ஊரார்கள் உந்தன் பெயரைக் கெடுத்திட்டாலும்
உனக்கு ஒருவர் உண்டு
வா அவரிடம் இன்று
அவர்தான் இயேசு (3)
உன்னை அணைத்துக்கொள்வாரே
அவர்தான் இயேசு (3)
உன்னைத் தோளில் சுமப்பாரே
கடல் அலையைப்போல துன்பம் தொடர்ந்து வருகையில்
காற்றைப்போல கஷ்டம் என்றும் இருக்கையில்
காற்றையும் கடலையும் அதட்டிய ஒருவர் உண்டு
கவலையும் கண்ணீரையும் ஆற்றிட ஒருவர் உண்டு
அவர்தான் இயேசு (3)
உன்னை படைத்தவர் அவரே
அவர்தான் இயேசு (3)
நீ நம்பிடும் கன்மலையே