Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

சரணங்கள்‌

1. ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌
தீர்த்திடுவார்‌ உந்தன்‌ தாகமதை
பாவங்கள்‌ ரோகங்கள்‌ சாபங்கள்‌ போக்கிட
பரிவாய்‌ அழைக்கிறார்‌

பல்லவி

வல்லவரே இயேசு நல்லவரே
மிக அன்பு மிகுந்தவரே
இயேசு வல்லவரே அவர்‌ நல்லவரே
உனக்காகவே ஜீவிக்கிறார்‌

2. ஆருமற்றவனாய்‌ நீ அலைந்தே
பாவ உளை தனிலே அமிழ்ந்தே
மாய்ந்திடாது உன்னைத்‌ தூக்கி எடுத்தவர்‌
மந்தையில்‌ சேர்த்திடுவார்‌ — வல்லவரே

3. வியாதியினால்‌ நொந்து வாடுவதேனோ
நேயன்‌ கிறிஸ்து சுமந்ததனை
சிலுவை மீதினில்‌ தீர்த்ததாலே இனி
சுகமடைந்திடுவாய்‌ — வல்லவரே

4. பரனின்‌ அன்பதை அகமதிலே
சொரிந்து தன்‌ திரு ஆலயமாய்‌
மாற்றியே தம்மைப்‌ போல்‌ தேவ சாயலாக்கி
மகிமை சேர்த்திடுவார்‌ — வல்லவரே

5. வானமும்‌ பூமியும்‌ மாறிப்‌ போயினும்‌
வாக்கு மாறாத ஓர்‌ வல்ல மீட்பர்‌
காப்பார்‌ வழுவாது உள்ளங்‌ கையில்‌ வைத்தே
கலங்கிடாதே நீ வா — வல்லவரே

 

Jeevanin ootraamay Yesu Paran

1. Jeevanin ootraamay Yesu Paran
Theerthiduvaar undhan thaagam adhai
Paavangal roagangal saabangal poakkida
Parivaai alaikkiraar

Vallavaray Yesu Nallavaray
Miga anbu Migundhavaray
Yesu Vallavaray Avar nallavaray
Unakkaagavay jeevikkiraar

2. Aarum attravanaai nee alaindhay
Paava ulai dhanilay amilndhay
Maaindhidaadhu unnai thooki eduthavar
Mandhaiyil seirthiduvaar

3. Vyaadhiyinaal nondhu vaaduvadheino
Neiyan Kirusthu sumandhadhanai
Siluvai meedhinil theerthadhaalay ini
Sugam adaindhiduvaai

4. Paranin anbadhai agam adhilay
Sorindhu Than thiru aalayamaai
Maatriyay Thammai poal Dheiva saayal aakki
Magimai seirthiduvaar

5. Vaanamum boomiyum maari poayinum
Vaakku maaraadha oar valla Meetpar
Kaappaar valuvaadhu ullam kayyil vaithay
Kalangidaadhay nee vaa

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version