Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi

பல்லவி

ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை
ஆண்டு நடத்துவீர், தேவாவி!

சரணங்கள்
1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்
மீதிலிரங்கச் சமயம் ஐயா
ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகு
அவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா

2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழை
என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
தினமும் வந்து வழி நடத்தும் – ஞான
தீபமே, உன்னத தேவாவி! -ஐயையா

3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்
அருவருத்து நான் தள்ளுதற்கு
வாகன சத்த மனம் தருவீர் – நீர்
வல்லவராகிய தேவாவி! -ஐயையா

4. பத்தியின் பாதை விலகாமல் – கெட்ட
பாவத்தில் ஆசைகள் வையாமல்
சத்திய வேதப்படி நடக்க – என்னைத்
தாங்கி நடத்திடும், தேவாவி! -ஐயையா

5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்
ஆண்டவரின் மேல் விசுவாசம்,
இன்பமிகு மெய்ச் சமாதானம் – இவை
யாவும் தருவீரே, தேவாவி! -ஐயையா

6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து – அவர்
இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
மாசில்லாத் துய்யனே, வந்துதவும் – நீர்
வராமல் தீராதே, தேவாவி! -ஐயையா


Iyyaya Naan Oru Maapaavi Ennai
Aandu Nadaththuveer Devaavi

1.Mei Aiyya Ithu Tharunum Aiyya Entran
Meethiliranga Samayam Aiyya
Aiyyaa Ippo Thenmeal Erangi Vegu
Avasiyam Varaveanum Devaavi

2.Enthiruthayam Paazh Nilamaam Yealai
Ennai Thiruththi Neer Aanbaaga
Thinamum Vanthu Vazhi Nadaththum Gnaana
Deepamae Unnatha Devaavi

3.Aagaatha Logaththin Vaazhvai Ellaam Thinam
Aruvaruththu Naan Thallutharkku
Vaagana Sathththa Manam Tharuveer Neer
Vallavaraagiya Devaavi

4.Bakthiyin Paathai Vilagaamal Ketta
Paavaththil Aasaigal Vaiyaamal
Saththiya Veathapadi Nadakka Ennai
Thaangi Nadaththidum Devaavi

5.Anbu Porumai Narsanthosham En
Aandavarin Mael Visuvaasam
Inba Migu Mei Samaathaanam Evai
Yaavum Tharuveerae Devaavi

5.Yeasu Kiristhuvil Naan Saarnthu Avar
Idaththilaeyae Nambikkai Vaikka
Maasillatha Thuiyyanae Vanthuthavum Neer
Varaamal Theerathae Devaavi

 

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks