Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக

1 இதோ, மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம், லோகமே;
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள், மாந்தர்களே.

2 இதோ, மா வேகத்தோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்
நல் நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின்மேல் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்;

3 ஆர் உம்மைப் பட்சமான
கர்த்தா, இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்?
நீர் பாவம் செய்திலரே,
பொல்லாப்பை அறயீரே;
ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?

4 ஆ! இதைச் செய்தேன் நானும்
என் அக்கிரமங்கள் தானும்,
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதகங்கள் இந்த
வதைப்புக் காதி மூலங்கள்.

5 நானே கை கால் கட்டுண்டு
பாதாளத்தில் தள்ளுண்டு
கிடத்தல் நியாயமே
நானே முடிவில்லாமல்
சந்தோஷத்தைக் காணாமல்
வதைக்கப்படல் நீதியே.

6 நீரோ என்மேல் உண்டான
அழுத்தும் பாரமான
சுமை சுமக்கிறீரே;
ஆசீர்வதிக்க நீரே
போய்ச் சாபமாகிறீரே;
நான் தப்ப நீர் படுகிறீர்.

7 நீர் என் கடனைத் தீர்க்க
பிணையாய் என்னை மீட்க
மரத்தில் ஏறினீர்;
ஆ, சாந்தமான சிந்தை,
நீர் முள் முடியின் நிந்தை
எத் தீங்கையும் பொறுக்கிறீர்.

8 நான் சாவின் வாய்க்குத் தப்ப,
நீரே அதை நிரப்ப
அதில் விழுகிறீர்;
நான் நீங்க நீர் முன்னிற்பீர்,
நான் வாழ நீர் மரிப்பீர்,
அவ்வாறு என்னை நேசித்தீர்.

9 கர்த்தாவே, நீர் பகைக்கும்
பொல்லாப்பை என்றென்றைக்கும்
வெறுத்தரோசிப்பேன்;
என் இச்சையை நாள்தோறும்
ஆகாத சிந்தையோடும்
நான் சிலுவையில் அறைவேன்.

10 ஆ, உமது ஜெபமும்
அவஸ்தையும் தவமும்
கண்ணீருங் கிலேசமும்,
நான் செத்தால் பரலோக
சந்தோஷத்துக்குப் போக
வழித் துணைக்குதவவும்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks