கொல்கதாவின் சிகரத்திலே
ஒரு குழந்தை போல அழுது விட்டேன்
நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா
இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா
விம்மி விம்மி அழுகிறேன்
என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன்
– கொல்கதாவின்
ஆணிகள் அறைந்தவனை கூட
நீர் அப்பா மன்னியும் என்றீர் !
விம்மி விம்மி அழுகிறேன்
என்னை வெறுமையாய் உணர்கிறேன்
அப்பா என் அப்பா
இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா
– கொல்கதாவின்
ரோஜாவின் தலையில் முள் முடியா?
ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?
விம்மி விம்மி அழுகிறேன்
அந்த வேதனையை உணர்கிறேன்
அப்பா என் அப்பா
வார்த்தை வரவில்லை அப்பா
– கொல்கதாவின்
நீர் தரைக்கு வந்து அறைய பட்ட வானமா?
ஜீவ தண்ணீருக்கே அன்று கடும் தாகமா?
விம்மி விம்மி அழுகிறேன்
உம் தாகம் கொண்டு தவிக்கிறேன்
அப்பா என் அப்பா
கண்ணீரில் மிதக்கின்றேன் அப்பா
– கொல்கதாவின்
உலகத்தின் ஜீவ பலி நீர் தானே!
உம் உதிரமும் பாய்ந்து வரும் யோர்தானே!
ஏங்கி ஏங்கி அழுகின்றேன்
இந்த ஏழை உம்மை தொழுகிறேன்
அப்பா என் அப்பா
எனக்காக பலியான அப்பா
கொல்கதாவின் சிகரத்திலே
ஒரு குழந்தை போல அழுது விட்டேன்
நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா?
இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா?
விம்மி விம்மி அழுகிறேன்
என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன்
கொல்கதாவின் சிகரத்திலே
ஒரு குழந்தை போல அழுது விட்டேன்
குழந்தை போல அழுது விட்டேன்