Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Song lyrics

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்
மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்
உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்
நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்
கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்
உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே-2
நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2

சிறகுகளால் உன்னை அணைத்தவரை நீ துதி செய்
வழிகளிலெல்லாம் காப்பவரை நீ துதி செய்
கோட்டையும் அரணும் ஆனவரை நீ துதி செய்
தம் கரங்களில் உன்னை தாங்கினவரை நீ துதி செய்
பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை துதி செய்
போராட்டங்களெல்லாம் நீக்கினவரை நீ துதி செய்
தேற்றரவாளனை அனுப்பினவரை நீ துதி செய்
தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே-2
நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2

துதி செய் அவரை துதி செய் -12

Ezhunthidu Ezhunthidu | Puthiya Anubavam 3 | Evg. Premji Ebenezer | Tamil Christian Song

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version