Paamalaigal

Vinnorkal pottrum – விண்ணோர்கள் போற்றும்

1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம்; பளிங்கு போலத் தோன்றுமே உம் கிருபாசனம்! 2. நித்தியானந்த தயாபரா அல்பா ஒமேகாவே மா தூயர் போற்றும் ஆண்டவா, ராஜாதி ராஜாவே! 3. உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே! நீர் தூயர் தூயர் உந்தனை துதித்தல் இன்பமே! 4. அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும், என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும். 5. உம்மைப் போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ? […]

Vinnorkal pottrum – விண்ணோர்கள் போற்றும் Read More »

Naan Devareerai Kartharae – நான் தேவரீரை கர்த்தரே

1.நான் தேவரீரை, கர்த்தரே, துதிப்பேன்; அடியேன் எல்லாரின் முன்னும் உம்மையே அறிக்கை பண்ணுவேன். 2.ஆ, எந்தப் பாக்கியங்களும் உம்மால்தான் வருமே; உண்டான எந்த நன்மைக்கும் ஊற்றானவர் நீரே. 3.உண்டான நம்மை யாவையும் நீர் தந்தீர், கர்த்தரே; உம்மாலொழிய எதுவும் உண்டாகக் கூடாதே. 4.நீர் வானத்தை உண்டாக்கின கர்த்தா, புவிக்கு நீர் கனிகளைக் கொடுக்கிற பலத்தையும் தந்தீர். 5.குளிர்ச்சிக்கு மறைவையும் ஈவீர்; எங்களுக்குப் புசிக்கிறதற் கப்பமும் உம்மால் உண்டாவது. 6.யாரால் பலமும் புஷ்டியும் யாராலேதான் இப்போ நற்காலஞ் சமாதானமும்

Naan Devareerai Kartharae – நான் தேவரீரை கர்த்தரே Read More »

Kalipudan kooduvoom – களிப்புடன் கூடுவோம்

1. களிப்புடன் கூடுவோம் கர்த்தரை நாம் போற்றுவோம் அவர் தயை என்றைக்கும் தாசரோடு நிலைக்கும். 2. ஆதிமுதல் அவரே நன்மை யாவும் செய்தாரே அவர் தயை என்றைக்கும் மாந்தர்மேலே சொரியும். 3. இஸ்ரவேலைப் போஷித்தார் நித்தம் வழி காட்டினார்; அவர் தயை என்றைக்கும் மன்னாபோலே சொரியும். 4. வானம் பூமி புதிதாய் சிஷ்டிப்பாரோ ஞானமாய் அவர் தயை என்றைக்கும் அதால் காணும் யாருக்கும்.

Kalipudan kooduvoom – களிப்புடன் கூடுவோம் Read More »

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய்

1.கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர், நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே மலைகள் தோன்றுமுன் சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே, யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். 6.

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய் Read More »

Entrendum Jeevipor – என்றென்றும் ஜீவிப்போர்

1. என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர், எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர், மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்; சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம். 2. ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல், ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால், வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும் அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும். 3. பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர், யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர், மலர் இலைபோல் மலர்வோம், செழிப்போம், உதிர்வோம், சாவோம், நீரோ மாறாதோராம்.

Entrendum Jeevipor – என்றென்றும் ஜீவிப்போர் Read More »

Unnathamaana stalathil – உன்னதமான ஸ்தலத்தில்

1. உன்னதமான ஸ்தலத்தில் மா ஆழமுள்ள இடத்தில், கர்த்தாவே, நீர் இருக்கிறீர், எல்லாவற்றையும் பார்க்கிறீர். 2. என் அந்தரங்க எண்ணமும் உமக்கு நன்றாய்த் தெரியும்; என் சுகதுக்கம் முன்னமே நீர் அறிவீர் என் கர்த்தரே. 3. வானத்துக்கேறிப் போயினும் பாதாளத்தில் இறங்கினும், அங்கெல்லாம் நீர் இருக்கிறீர், தப்பாமல் கண்டுபிடிப்பீர். 4. காரிருளில் ஒளிக்கினும், கடலைத் தாண்டிப் போயினும் எங்கே போனாலும் தேவரீர் அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர். 5. ஆராய்ந்து என்னைச் சோதியும், சீர்கேட்டை நீக்கி ரட்சியும், நல்வழி தவறாமலே

Unnathamaana stalathil – உன்னதமான ஸ்தலத்தில் Read More »

Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர்

யாரிலும் மேலான அன்பர், மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே; மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே! 2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே; பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார், பற்றினோரை மீட்டுக்கொள்வார், துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே! 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு, மா

Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் Read More »

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம்

1. கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம் இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம் அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம் தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில் திடன் ஈவார். கிறிஸ்துவின் வீரர் நாம் புகழ்ந்து போற்றுவோம் நம் மேன்மையுள்ள ராஜனை எக்காலும் சேவிப்போம். 2. கிறிஸ்துவின் வீரர் நாம் அவரின் பேர் நாமம் சிலுவை மேலாய் நின்றதாம் மாண்போடு தாங்குவோம் நஷ்டமும் லாபமே எந்நோவும் இன்பமே, அவரின் நாமம் ஏற்றிடும் கிறிஸ்துவின் வீரர்க்கே 3. கிறிஸ்துவின்

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம் Read More »

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா

1.அன்புருவாம் எம் ஆண்டவா, எம் ஜெபம் கேளும், நாயகா; நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும். 2.வாலிபத்தில் உம் நுகமே வாய்மை வலுவாய் ஏற்றுமே, வாழ்க்கை நெறியாம் சத்தியம் நாட்ட அருள்வீர் நித்தியம். 3.அல்லும் பகலும் ஆசையே அடக்கி ஆண்டு, உமக்கே; படைக்க எம்மைப் பக்தியாய் பழுதேயற்ற பலியாய். 4.சுய திருப்தி நாடாதே, உம் தீர்ப்பை முற்றும் நாடவே; வேண்டாம் பிறர் பயம் தயை, வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. 5.திடனற்றோரைத் தாங்கிட, துக்கிப்பவரை

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

பாலரே ஓர் நேசர் – Paalarae Oor Neaser 1. பாலரே ஓர் நேசர் உண்டுவிண் மோட்ச வீட்டிலேநீங்கா இந்நேசர் அன்புஓர் நாளும் குன்றாதே;உற்றாரின் நேசம் யாவும்நாள் செல்ல மாறினும்,இவ்வன்பர் திவ்விய நேசம்மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டுவிண் மோட்ச நாட்டிலேபேர் வாழ்வுண்டாக இயேசுஅங்கரசாள்வாரே;ஒப்பற்ற அந்த வீட்டைநாம் நாட வேண்டாமோ?அங்குள்ளோர் இன்ப வாழ்வில்ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டுவிண் மோட்ச வீட்டில் நீர்நல் மீட்பரின் பேரன்பால்பொற் கிரீடம் அணிவீர்;இப்போது மீட்பைப் பெற்றுமா

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Nearthiyaana thanaithum – நேர்த்தியானதனைத்தும்

நேர்த்தியானதனைத்தும் சின்னம் பெரிதெல்லாம் ஞானம், விந்தை ஆனதும் கர்த்தாவின் படைப்பாம். 1. பற்பல வர்ணத்தோடு மலரும் புஷ்பமும், இனிமையாகப் பாடி பறக்கும் பட்சியும். 2. மேலோர், கீழானோரையும் தத்தம் ஸ்திதியிலே, அரணில், குடிசையில் வசிக்கச் செய்தாரே 3. இலங்கும் அருவியும், மா நீல மலையும் பொன் நிற உதயமும் குளிர்ந்த மாலையும் 4. வசந்த காலத் தென்றல், பூங்கனித் தோட்டமும் காலத்துக்கேற்ற மழை, வெய்யோனின் காந்தியும். 5. மரமடர்ந்த சோலை பசும் புல் தரையும், தண்ணீர்மேல் தாமரைப்பூ,

Nearthiyaana thanaithum – நேர்த்தியானதனைத்தும் Read More »

Naan Thothanaaka Vendum – நான் தூதனாக வேண்டும்

1. நான் தூதனாக வேண்டும் விண் தூதரோடேயும் பொற் கிரீடம் தலை மேலும் நல் வீணை கையிலும் நான் வைத்துப் பேரானந்தம் அடைந்து வாழுவேன்; என் மீட்பரின் சமுகம் நான் கண்டு களிப்பேன். 2. அப்போது சோர்வதில்லை கண்ணீரும் சொரியேன் நோய், துக்கம், பாவம், தொல்லை பயமும் அறியேன் மாசற்ற சுத்தத்தோடும் விண் வீட்டில் தங்குவேன் துதிக்கும் தூதரோடும் நான் என்றும் பாடுவேன். 3. பிரகாசமுள்ள தூதர் நான் சாகும் நேரத்தில் என்னைச் சுமந்து போவார் என்

Naan Thothanaaka Vendum – நான் தூதனாக வேண்டும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks