Boomiyin Kudikalae Neer Thamathamilla – பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு

பல்லவி

பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசு
சாமியினன்னாமமதிலே மகிழுவீர்.

அனுபல்லவி

ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மை
உருக்கமாய்த் – தங்கருணைப்
பெருக்கமாய் – மீட்டரணாந்
துருக்கமாய் – இதுவரைக்கும்
நெருக்கமாய் – ஊக்கமாய்நின்றார் – பூமி

சரணங்கள்

1. தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்
தந்துமா நிர்பந்தமற விந்தையாகவே,
இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்
சிந்தைல் நினைந்து முழு நன்றியாகவே,
சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ?
தாசரே – யேசுநாதர்
நேசரே, – எருசலேம்
வாசரே, – கர்த்தருக்குள்ளாம்
ராசரே, – ஆசாரிமாரே! – பூமி

2. கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற
சத்தியத்தை எத்தினமும் உற்றுணர்வீர்;
அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்வமெனச்
சொற்றவரே விக்கிரகப் பத்தியகல்வீர்;
இத்தரையில் நாங்களல்ல உத்தபரன் எங்களைக் கண்
ணோக்கினார், – எங்கள்வம்
போக்கினார், – சகலதுன்பம்
நீக்கினார், – தமதுமந்தை
ஆக்கினார், – தூக்கினாரென்று – பூமி

3. ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம் துதியோ
டாவியுடனே நமது நாவுமிசைந்து
தேவ பிரகாரங்களிலே வருவோமே, புகழ்ச்சி
மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து
பாவலர் மற்றோரேநல்ல நாவலரே கர்த்தர்வீட்டுக்
கோடுவோம், – அவர்நாமத்தில்
கூடுவோம், – அவர்பதத்தை
நாடுவோம், – அவர்மகிமை
தேடுவோம், – பாடுவோம் துதி – பூமி

4. வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை
உள்ள தூழி ஊழிகாலம், தொல்லையுண்டுமோ?
சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள்
எல்லாவற்றிலு மெங்களுக்கல்லலண்டுமோ?
புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம்
பிடிக்கிறோம், – சத்தியத்தைப்
படிக்கிறோம், – பேயரங்கம்
இடிக்கிறோம், – அவனையெங்கும்
அடிக்கிறோம், – சீக்கிரம் ஜெயம் – பூமி

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks