Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய்

ஐயனே இவர்க் காசி ஈகுவாய் – Aiyanae Ivarkaasi Eeguvaai

பல்லவி

ஐயனே! இவர்க் காசி ஈகுவாய்,
மெய்யாய் உன்னைச் சார-என்றும்

அனுபல்லவி

பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,
மெய்யாய் உன்னைச் சார-என்றும் – ஐயனே!

சரணங்கள்

1. பாவ முஞ்செக சால மும்விட்டுப்
பனுவ லிரைப் படியே,-வெகு
ஆவ லாயுன தருளி னாலுயிர்
அடையக் கதி யடைய-என்றும் – ஐயனே!

2. நற்றுதி செயும் பத்த ராயுன்றன்
பொற்றாளிணை போற்றி!-ஓங்கு
சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்
சான்றோர் நெறிசார-என்றும் – ஐயனே!

3. இன்று தொட்டிவர் என்று மேயுனைச்
சென்றே எங்குங் கூறிப்,-பயன்
நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி
ஒன்றி யுயர்ந்த தோங்க-என்றும் – ஐயனே!

4. அன்று சீடராய்ப் பன்னி ருவரை
அழைத்தாய், தயை விழைத்தாய்;-இவர்
என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட
நின்றுன் கிருபை ஈவாய்-என்றும் – ஐயனே!

Aiyanae Ivarkaasi Eeguvaai
Meiyaai Unnai Saara Entrum

Poiyaa Mivvulaga Kaasai Vittu
Meiyaai Unnai Saara Entrum

1.Paava Munjsega Saala Mum Vittu
Panuvalivarai Padiyae Vegu
Aavalaayuna Tharuli Naaluyir
Adaiya Kathiyadaiya Entrum

2.Natthi Seiyum Paththa Raayuntran
Pottraalinai Pottri Oongu
Sarkuna Mei Vaazhu Meapettru
Saantoor Neari Saaraa Entrum

3.Intru Thottivar Entru Meayunai
Sentrae Engum Koori Payan
Nantri Pettruyar Ventri Yuttini
Ontri Yuyarntha Thonga Entrum

3.Anteu Seedaraai Panniruvarai
Alaiththaai Thayai Vilaiththaai Evar
Entrum Sabaiyil Oontri Vaigida
Nintrun Kirubai Eevaai Entrum

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks