ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்
மாதிடமே – ஆனடை குடிலிடை
மோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார்
பாருருவாகு முன்னே இருந்த
பரம்பொருள் தானிவரோ
சீருடன் புவிவான் அவை
பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ
மேசியா இவர் தானோ – நம்மை
மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
ஆதி அன்புள்ள மனசானோ
தித்திக்கும் தீங்கனியோ – நமது
தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசய மேவிய விண்ணொளியோ
பட்டத்து துரை மகனோ- நம்மை
பண்புடன் ஆழ்பவனோ
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்பு காட்டிடும் தாயகனோ.
ஜீவனின் அப்பமோ தான் – தாகம்
தீர்த்திடும் பானமோ தான்
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவரிவர் தானோ
Aarivar Aaraaro Intha Avaniyor
Maathidamae Aanatai kudilidai
Monamaayuthitha Iv Arputha paalakanaar
Paaruruvaaku Munnae Iruntha
Paramporul Thaanivaro
Seerudan Puvivaan Avai
Porul Yaavaiyum Sirushtitha Maavalaro
Maesiyaa Ivar Thaano Nammai
Meaithidum Narar kono
Aasaiyaai Manitharukaai Marithidum
Aathi Anpulla Manasaano
Thithikkum Theenganiyo Namathu
Thaevanin Kannmanniyo
Methavae Ulakirul Neekkidum
Athisaya Maeviya Vinnnnoliyo
Pattathu Thurai Magano Nammai
Panpudan Aalpavano
Kattalai Meeridum Yaavarkkum
Mannippu Kaatdidum Thaayakano
Jeevanin Appamo thaan Thaakam
Theerthidum Paanamo Thaan
Aavalaay Yaelaikal Adainthidum
Adaikala Maanavarivar Thaano