ஆரணத் திரித்துவமே – Aarana Thirithuvamae
பல்லவி
ஆரணத் திரித்துவமே,-எமை
ஆண்டருள், மகத்துவமே.
அனுபல்லவி
பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,
பொன்னுலகத்தெழும் உன்னதமான
போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண
சரணங்கள்
1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்
ஆபத் தனைத்தையும் தீரும்;
இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு
இரக்கத்தால் முகம் பாரும்;
நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;
நம்பரா, கருணாம்பரா,
ஞானத் தனு மானத்தொளிர்
மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண
2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்
முக்ய கிருபையின் தேவா,
மேவி அடியாரைத் தேவா,-பல
வெவ்வினையினின்றும் கா, வா;
பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே,
பக் ஷமே, பரம பொக் ஷமே,
பாடும்புகழ் நாடும் பரி
வோடும் தயை நீடும்பரா! – ஆரண
Aarana Thirithuvamae -Emai
Aandarul Magaththuvamae
Poorana Deva Pithaa Suthan Aaviyae
Ponnulaga Thozhum Unnathamaana
Potha Kirubaiyaa Paththathi Neethi Sudarae Niththiya
1.Antrantrai Appaththai Thaarum Engal
Aabath Thanaithaiyum Theerum
Intrum Entrengalai Searum Thiru
Erakkaththaal Mugam Paarum
Nantri Keattorkalai Kontru Podatheayum
Nambaraa Karunaamparaa
Gnaana Thanu Maanatholir
Meanmai Dhivviya Paanaththarul
2.Moovar Ontraana Yehovaa uyar
Mukya Kirubaiyin Devaa
Meavi Adiyaarai Devaa Pala
Vevvinaiyinintrum Kaa Vaa
Paavikal Naangal Yeavaiyin Makkalae
Pakshamae Parama Pokshamae
Paadum Pugal Naadum Pari
Voodum Thayai Needumparaa