பாவியென்றும் துரோகியென்றும் எல்லோரும் என்னை
வெறுத்து ஒதுக்குகையில்
கேடுகெட்ட வாழ்க்கையினை நான் வாழுறேன்னு சொல்லி கேவலமா பேசுகையில்
என்னை பெயர் சொல்லி அழைச்சவரே
என்னை மாற்றிட துடிச்சவரே
ஒரு முறை நான் உம்மை பாக்கணுமுன்னு
நீர் போகும் வழியினில் காத்து கிடந்தேன்
உங்க முகத்தை நான் காண விரும்பி அத்தி மரத்தில் நான் ஏறி அமர்ந்தேன்
அருகினில் வந்து என் பெயரை சொல்லி அழைச்சவரே
என்னோட தங்கிட விரும்பி இறங்கி வா என்றவரே
உங்க முகத்தை நான் பார்த்தவுடனே
புதுசாச்சு லேசாச்சு எந்தன் மனமே
நீங்க தங்கிட தடையாகயிருந்த பாவங்களை உம்மிடத்தில் சொல்லி அழுதேன்
அன்போடு என்னை அணச்சு இரட்சிப்பை அளித்தவரே
வெறுமையாய் இருந்த மனதில் முழுசா நெரஞ்சவரே