உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்-2
-உன்னதர் நீரே
தூயவரும் நீரே
1.எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்-2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய்
தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர்-2
-உந்தன் துதி பாடி
2.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும்-2
வல்லவரே உந்தன் கரம் என்னை
நல்லவரே உந்தன் அரண் என்னை
தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்-2
-உந்தன் துதி பாடி