1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல்
கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே.
கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில்
காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே.
2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே
மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும்
வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன்
கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில்.
3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின்
கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம்.
வாலிப குமரரும் வலியர் கையம்புகள்
பல வானம்பராத்தூணி பண்புடன் நிறையுமே.
4. பலமுளான் எவனும் பாக்யவான்,
ஒலிமுக வாசலில் வலிமையுடனின்று
பகைவரைக் கண்டுமே பயமெதுமின்றியே
பலபல பேசுவான் பாரினிலே யென்றும்.