திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul
பல்லவி
திருமா மறையே-அருள்பதியே! நின்
திருச்சபை வளர நின்தயை புரியே.
சரணங்கள்
1.கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,
கனகார் புவிநின்றே அகல,
மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, – திருமா
2.யேசு நாமமெங் கணுமொளி வீச,
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச. – திருமா
3.ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,
நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,
சீலமதாயுனின் வசனமதுரைக்க. – திருமா
4.ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே,
போரற அருளிய நேயமே போலே. – திருமா
5.நின்னையன்றிக் கட்டிட எமக்காகா,
நேயா, தூயா நினை வாகா,
உன்னி உழைத்திடப் பலமளி யேகா. – திருமா
6.சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க,
தமியோர் நின் புகழே உரைக்க,
நித்திய பாக்கியமே புவிக் களிக்க. – திருமா
Thirumaa Maraiyae Arul Pathiyae Nin
Thirusabai Valara Ninthayai Puriyae
1.Karunai Vaasaka Kathir Bela Tholira
Kanakaar Puvi Nintrae Agala
Marul Jana Molipura Avanarulanara
2.Yeasu Naama Mengum Kanu Moli Veesa
Iraiyae Ninai Mei Visuvaasa
Neasa Modaeyunin Thaasarkal Peasa
3.Gnaalam Anthamattum Emmudanirukka
Nayavaaga Kaliththaai Emakkurukka
Seela Mathaayunin Vasanamathuraikka
4.Aarindu Pearaana Varudanae
Amalaa Irunthaai Veaguthidanae
Porara Aruliya Neayamae Polae
5.Ninnaiyantri Kattida Emakkaaga
Neayaa Thooya Ninai Vaaga
Unni Ulaiththida Palamali Yoga
6.Sathya Potham Iththaraithanil Sealikka
Thamiyor Nin Pugalae Uraikka
Niththiya Bakkiyamae puvi Kalikka