ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை
பல்லவி
ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ?
அனுபல்லவி
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். – ஆ!
சரணங்கள்
1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி,
அம்பர வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி,
கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். – ஆ!
2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று,
தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை-ஜெகத்தில் எறிந்துவிட்டு,
ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,
அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன். – ஆ!