பரனே, திருக்கடைக்கண் பாராயோ?
பல்லவி
பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?
சரணங்கள்
1. திறம் இலாத எனை முனியாமல்,-யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். – பரனே
2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். – பரனே
3. அடியேனுக் கருள் செய் இப்போது,-உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? – பரனே
4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ? – பரனே
5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம்-எனக்
கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! – பரனே