Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன்

சேர் ஐயா எளியேன்

பல்லவி

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

சரணங்கள்

1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், – அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு
தேவனே, கருணாகரனே – எனைச்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks