பல்லவி
ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல
ஆயன் நான் தானே
சரணங்கள்
1.ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச
காயம்புரியும் மாதூய பிதாவினோர்
சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத
பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய – ஆயன்
2.சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப்
போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை
ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக்
காலந் தப்பாதென்றும் வேலை செய்யும்நல்ல- ஆயன்
3.இட்டமுள்ள ஆட்டுக்குட்டுகளைக் கொல்லுந்
துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே
ட்டுக்கொள்ளப் பண்ணி திட்டத்துடனின்று
வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள- ஆயன்
4.அன்புற்ற தாயவள் தன்பெற்ற பிள்ளையை
இன்புற்று நோக்கும் போல் துன்புற்ற ஆட்டினை
என்பெற்ற பிள்ளையாய் நண்புற்று நோக்கியே
பொன்பெற்ற கையினால் நான்பற்றித் தூக்குவேன்- ஆயன்
5.ஆட்டுமந்தைக் கூலிக் கேட்டுவன் போலநான்
காட்டோனாயைக்கண்டால் ஒட்டம் பிடிப்பேனோ
மாட்டேனே மெய்யாக ஈட்டியினாற்குத்திப்
போட்டிடுவேன் அப்போ வேட்டைக்காரன்போலே- ஆயன்
6.சாவுறு மாட்டிற்காய் ஓவியமானவென்
சீவன்விடக் கொஞ்சமாவ தஞ்சுவேனோ
ஆவலுடனல்லோ ஆவியைப் போக்குவேன்
பாவப் பசாசுகள் கூவிச் சாகும்படி- ஆயன்
7.காலை நேரத்திலும் மாலை நேரத்திலும்
சீலந் தப்பாமலும் காலந்தப்பாமலும்
நூலென்ற வேதத்தின் பாலென்றுந் தங்கியே
வேலைசெய்யும் நல்ல வேலைக்காரருள்ள- ஆயன்