ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan
பல்லவி
ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்.
அனுபல்லவி
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே
சரணங்கள்
1. மேசியாவென்றுரைத்து, யூத
ராஜனென்றே நகைத்து,
தூஷணித்தே அடித்து, நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி,
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே
2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்
பேதுரு மறுதலிக்க,
சூதா யெரோதே மெய்க்க, வெகு
தீதாயுடை தரிக்க,
நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே
3. நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்ட மலையெடுத்து
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து,
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே – ஏங்குதே
Yeanguthae Ennakanthaan Thuyar
Thaanguthillai Muganthaan
Poongavilae Kaninthengi Neer Mantrada
Oongiyae Uthirangal
Neengiyae Thuyar Kandu
1.Measiya Entru Uraitha Yutha
Raajanentrae Nagaiththu
Thooshaninththae Adiththu Ninaikutti
Maasukalae Sumaththi
Aasaaramintriyae Aasaariyanidam
Neesarkar Sei Kodum Thoshamathu Kandu
2.Yuthaas Kaattikodukka Seemon
Peathuru Maruthalikka
Sootha Yearothae Meikka Vegu
Theethayudai Tharikka
Naathanae Ivvitham Neethamontrillaamal
Sothaniyaai Seiyum Veadhanaiyai Kandu
3.Neenda Kuru seaduththu Erusalaem
Thaanda Malai Eduththu
Eendal Pinnae Thoduththu Avarin Meal
Veandum Vasai Koduththu
Aandavar Kai Kaalil Poondidum Aaniyaal
Maandathinaal Narar Meenda Thentraalumae