தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul
1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய்ம் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
அய்யா, நின் அடி பணிந்தேன்.
2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.
3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றி
பாதையைத் தவறிடினும்,
கூவி விளித்தும் தன் மார்போடணைத்தன்பாய்
கோது பொறுத்த நாதா!
4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா தற்காத்தருள்வாய்.
5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப்பீடம் படைப்பேன்!
மோச வழிதனை முற்றும் அகற்றி என்
நேசனே நினைத் தொழுவேன்.
6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
பிரித்திடுமோ தெய்வன்பை?
1.Deivanbin Vellamae Thiruvarul Thottramae
Meim Manathaananthame
Seiyaa nin sempaatham seavikka ev vealai
Aiyya Nin Adi paninthean
2.Sontham unathallaal soora vazhi sella
Enthaai Thunivonae Yaan
Punthikamalamaam Poomaalai Koorthu Nin
Porpaatham pidithu kolluvaen
3. Paava seattril Palavealai palamintri
Paathai thavaridinum
Koovi vizhithum Than maarpodanithanbaai
koothu poruththa naatha
4. Moorkkagunam kobam logam sittrinbamum
moga yeakkamaanathai
Thaakkiyaan Thadumaari Thayangidum Vealayil
Tharparaa Tharkaathukolluvaai
5, Aasai paasam pattru Aavalaai Ninthiru
Poosai peedam padaipean
Mosa vazhithanai muttrum agattri en
neasanae Ninai thozhuvean
6.Maranamo jeevano marumaiyo boomiyo
Magimaiyo varungaalmao
Pira sirushtiyo uyranthatho thaalznthatho
Pirithidumo Deivanbai