Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் – Vaanam Boomiyo Paraaparan

பல்லவி

வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?

அனுபல்லவி

ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம்

சரணங்கள்

  1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
    பொறுமைக் கிருபாசனத்துரை,
    பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம்
  2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
    நித்ய பிதாவினோர்‌
    மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம்
  3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
    கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
    நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம்
  4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல‌;
    மாறில்லாத ஈறில்லாத‌
    வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம்
  5. சீயோனின் மாதே, இனி க்ஷணந்தரியாதே,
    மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
    வந்தவர் மணவாளனல்லவோ?-ஆ! என்ன இது? – வானம்

Vaanam Boomiyo Paraaparan
Maanidan Aanaaro Enna Ithu

GnanaVaankalae Nithaana-Vaankalae
Enna Ithu?

1.Ponnakarath Thaalum Unnathamae Neelum
Porumai Kirubaadanthurai
Boopathi Vanthathae Athisayam. Aa! Enna Ithu!

2.Sathya Saruveasan Thuthya Kirubai Vaasan
Nithya Pithaavinoor
Magaththuva Kumaaranao Evar?Aa! Enna Ithu!

3.Manthai Kaattilae Maattukottililae
Kanthai Thuniyai Pothintha Sootchi
Ninthai Paavikal Sontha Kan Kaatchi! Aa! Enna Ithu!

4.Vearae Pearalla Surar Vinnavar Aarumalla
Maarillatha Eerillatha
Vallamai Devanae Pullil Kidakkiraar! Aa! Enna Ithu!

5.Seeyonin Maathae Ini Sunanthariyaathae
Maayamenna Unakku Sollavo
Vanthavar Manavaalan Allavo? Aa! Enna Ithu!

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks