நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்
மகா பெரிய நாள் – இந்த
பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள்
அந்த நாள்!
1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட
இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட – நியா
2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால்
நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே – நியா
3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே
சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே – நியா
4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே
பிசாசின் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்படுவாரே – நியா
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
Humble yourselves in the sight of the Lord, and he shall lift you up.✝️
யாக்கோபு : James:4