தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei

பல்லவி

தேவசுதனைத் துதிசெய், என துள்ளமே
தேடி, அவர் தயவைப் பாடி, மன்றாடி இன்று

அனுபல்லவி

ஜீவ தயாபர ரான யெகோவாவின்
திருச் சுதனாகிய கிறிஸ்தெனும் ரட்சகர்
பாவ விமோசனராகச் சிலுவையில்
பாடுபட் டிறந்துயிர்த் தெழுந்துனை மீட்டவர்

சரணங்கள்

1 வானும், புவியும், திரையும்-அவைகளின் உள்
வஸ்து பலவும் தோன்ற விஸ்தரித் தமைத்து
வாழும் காலத்துக்குத் தக்க-நன்மைகள், உனைச்
சூழும் செயல்கள் மிகுக்கக் கொடுத் துயர்த்தி
போன வருடம் முழுதும் நடத்திக் காத்து
புது வருடமார் இதில் ‘சதுருடன் கொண்டு வந்து
போதகரும் சபைகளும்-சிநேகிதரும்
வேத நெறியை எடுத்துப் பாராட்ட, தேவ
ஞானமும் நீதியும் பரி-சுத்தமும் மீட்பும்
ஞயமுடனாகிய கிறிஸ்தேசு உன் பெல
ஈனமதில் உதவி செய்து-நிற்கிறார்
இன்பமுடன் அவர் அன்பதில் நிலைத்து நில்

2. சத்துருக்கள், சோதனைகள் துன்பங்கள், நோய்கள்
சாரும் கவலைகளும் சீறும் பசாசுகளும்
சதியாய் உன்தனைப் பிடிக்க வளைந்தும் ஜீவ
அதிபதி வந்துனை அடுக்க நின்றுன்னைக் காத்து
பத்திரமாக நடத்தி, நீ செய்த பல
பாவச் சுமையை அவர் தாவிச் சுமந்து தீர்த்து
பரிசுத்தக் கூட்டத்துடனே -அன்பின் விருந்தைத்
தரிசித்துட் கொள்ள உன்தனைச் சேர்த்த தயவை
உத்தமக் கீழ்ப்படிதலுடன்-அனுதினம்
ஊக்கமாய் உணர்ந்து, நல் தீர்க்கமாய் ஜெபம் செய்து,
அத்தன் வருகைக்குக் காத்து எதிர் நோக்கி
ஆயத்தமாய் இரு, சாயுச்சியம் அடைந்திட

3.ராஜர் துரைகள் தலைவர்-பிரபுக்களும்
ராஜ்யக் குடிகளும் மாட்சிமையுள்ள தேவ
ரட்சிப்படைந்து தழைத்துச் சமாதானமாய்ப்
பட்சத்துடனே நடந்து, வாழ்க! பூ எங்கும்
வாசம் செய் போதகர்களும் தேவ தயவை
வாழ்த்தி, பணிந்து புகழ்ந் தேத்தும் கிறிஸ்தோர்களும்
வல்லமை கொண்டு செழித்து, சுவிசேஷத்தைச்
சொல்லும் திறத்தில் ‘கதித்து வாழ்க! சகல
தேசங்கள், பாஷைகள், கோத்-திராங்களெல்லாம்
தேவாதி தேவன் எனும் கர்த்தராகிய மேசி
யாவின் அரசாட்சியைச் சேர்த்திட
விண்ணப்பமும் ஜெபமும் வளர்ந்தேறிட

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks