துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei maname

துதிசெய் மனமே நிதம் – Thuthi Sei Manamae Nitham

பல்லவி

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1. முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – துதி

2. ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
எக பரன் உன் காவலனாய்யிருந்தாரே – துதி

3. சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை – துதி

4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே – துதி

5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே – துதி

Thuthi Sei Manamae Nitham
Thuthi Sei Immattum Nadathina Un Devanai
Intrum Entrum Nantri Miguntha Manathodae

1.Mun Kaalamellam Unnai Tham Karamathil Yeanthi
Vendiya Nanmaikal Yaavum Uganthaliththarae- Thuthi

2.Yeankidum Vazhiyil Paadukal Pala Nearntha pothu
Yega Paran Un Kaavalanaai Iruntharae- Thuthi

3.Sothanai Palavaai Megam poal Ummai Suznthalum
Sethamura muttrilum Kaakka Vallorai – Thuthi

4.Thaai thanthai Thaanum Yeagamaai Unnai Maranthalum
Thooyarin Kaiyil Un Saayal Ullathai Ninaithae – Thuthi

5.Santhatham Unnai Nadathidum Saththiya Devan
Sontham Paratti Unnudan Irupathinalae -Thuthi

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version